உழவர் சந்தை ரோட்டில் போக்குவரத்து நெரிசல்
உடுமலை: உடுமலையில் அதிக அளவு போக்குவரத்து நிறைந்து காணப்படும் உழவர் சந்தை ரோட்டில், காலை நேரங்களில் தற்காலிக கடைகள் அமைக்கப்படுவதால், போக்கவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
உடுமலை ரயில்வே ஸ்டேஷன் அருகே உழவர் சந்தை செயல்படுகிறது. இந்த ரோட்டில் சந்தைக்கு வெளியே காலை நேரங்களில் திறந்த வெளியில் தற்காலிக கடைகள் போடப்படுகின்றன.
இதனால், இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் திணறுகின்றன. போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. சில சமயங்களில் விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இது தொடர்பாக, பொதுமக்கள் பல முறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர்.
எனவே, இந்த தற்காலிக கடைகளை அகற்ற, நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement