மேல்மலையனுார் கோவிலில் துர்கா ஸ்டாலின் தரிசனம்

செஞ்சி : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா நேற்று சாமி தரிசனம் செய்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா நேற்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடந்த உறவினரின் சஷ்டியப்த பூர்த்தி விழாவில் பங்கேற்றார். அங்கு சாமி தரிசனம் செய்தார்.

பின்னர், காலை 10:20 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலுக்கு வந்தார். அவருக்கு, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் செல்வராஜ் மற்றும் அறங்காவலர்கள் வரவேற்பு அளித்தனர்.

கோவிலில் அவர், அங்காளம்மன் மற்றும் உற்சவரை தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவிலில் உள்ள சித்தர் சன்னு மஹா முனிவர் ஜீவ சமாதி பேய் மேடையில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்தார். தரிசனம் முடிந்து, 10:45 மணியளவில் புறப்பட்டு சென்றார்.

Advertisement