தினம்தினம் குடிநீரும் - மின்சாரமும் வீணாகுது அதிகாரிகளின் துாக்கம் கலைய மாட்டேங்குது!

வீணாகும் மின்சாரம்

திருப்பூர், முருகம்பாளையம் - இடுவம்பாளையம் ரோட்டில் உயர்கோபுர விளக்கு பகலில் எரிந்து மின்சாரம் வீணாகிறது.

- சங்கரன், முருகம்பாளையம்.

n திருப்பூர், பி.என்., ரோடு, சிவன் தியேட்டர் ஸ்டாப்பில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்ட் வரை தெருவிளக்குகள் பகலில் எரிந்து மின்சாரம் வீணாகிறது.

- விஸ்வநாதன், பி.என்., ரோடு.

குப்பை அள்ளுங்க...

கரைப்புதுார் ஊராட்சி, நொச்சி பாளையம், பண்டரிநகரில் வழிநெடுக கொட்டப்பட்டுள்ள குப்பையை அள்ள வேண்டும். அள்ளாத குப்பையால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

- குமார், கரைப்புதுார்.

n திருப்பூர், மண்ணரை, ஏ.டி., காலனியில் குப்பை அள்ளுவதில்லை. தேங்கும் குப்பையால் துர்நாற்றம் வீசுகிறது.

- தினேஷ், மண்ணரை.

வீணாகும் தண்ணீர்

அவிநாசி - மேட்டுப்பாளையம் ரோட்டில், கருவலுார் அருகே மெயின் குழாய் உடைந்து அடிக்கடி தண்ணீர் வீணாகிறது. இதனால் சாலை சேதமாகி வருகிறது.

- குமாரசாமி, கருவலுார்.

மாநகராட்சி கவனத்துக்கு...

திருப்பூர் பார்க்ரோடு, வெள்ளிவிழா பூங்காவில் உள்ள குழந்தைகளின் சறுக்கு விளையாட்டு உபகரணங்கள் சேதமாகி, ஆடைகளை கிழிக்கும் நிலையில் உள்ளது. சரிசெய்ய வேண்டும்.

- ஈஸ்வரன், பார்க் ரோடு.

தெருவிளக்கு எரிவதில்லை

திருப்பூர், ஆறாவது வார்டு, தொட்டிய மண்ணரை, டவர் லைன் வீதியில் தெருவிளக்கு எரிவதில்லை. வீதி முழுதும் இருள்சூழ்ந்து காணப்படுகிறது.

- கலையரசி, மண்ணரை.

n திருப்பூர், 32வது வார்டு, கோல்டன்நகர், பகவான் நகரில் தெருவிளக்குகள் எரிவதில்லை. எரியாத விளக்குகளை மாற்றி புதுவிளக்கு பொருத்த வேண்டும்.

- ராஜேந்திரன், பகவான் நகர்.

Advertisement