வேன் சேதம்: ஒருவர் கைது

விருத்தாசலம் : போதையில் டாடா ஏஸ் வேன் கண்ணாடியை உடைத்து மிரட்டல் விடுத்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மரகதசுரம் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் மகன் சத்தியகீர்த்தி, 23. இவர் கடந்த 17 ம் தேதி இரவு, கம்மாபுரம் - தேவங்குடி சாலையில் டாடா ஏஸ் வேனில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே பைக்கில் வந்த கம்மாபுரம் கிழக்குத் தெரு லட்சம் மகன் சுபாஷ், 24, ராஜேந்திரன் மகன் ராமர், 25, ஆகியோர் போதையில் வேனை நிறுத்தி சத்தியகீர்த்தியை ஆபாசமாக திட்டியுள்ளனர்.

தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த அவர்கள், கல்லால் வேன் கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பியோடினர். இது குறித்த புகாரின் பேரில், கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, ராமரை கைது செய்தனர். சுபாைஷ தேடி வருகின்றனர்.

Advertisement