ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்டில் -செயல்படாத -புறக்காவல் நிலையம்

ராஜபாளையம்: ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்டில் குற்றங்களை கட்டுப்படுத்த புறக்காவல் நிலையத்தை முழு நேரம் செயல்பாட்டிற்கு கொண்டு வர பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

ராஜபாளையம் சங்கரன்கோவில் ரோட்டில் புது பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. 50க்கும் அதிகமான கடைகள், உணவகங்கள், வாகன நிறுத்தம், மூன்று பக்கம் கழிப்பறைகள், தினமும் 500க்கும் அதிகமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ்கள் வந்து செல்கின்றன.

நுழைவு பகுதியில் புற காவல் நிலையம் அமைக்கப்பட்டு பெரும்பாலும் பூட்டப்பட்டும் மற்ற நேரங்களில் குற்றவாளிகளை விசாரிக்கும் அலுவலகமாக மட்டும் செயல்படுகிறது.

இதன் காரணமாக பயணிகளின் பொருட்கள் திருட்டு, போதை ஆசாமிகள் நடமாட்டம், செயின் பறிப்பு உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் அடிக்கடி நடைபெறும் நிலையில் கலங்காபேரி கிராமத்தை சேர்ந்த ஜிஜேந்திரா 26, பஸ் தாமதம் குறித்து விசாரிக்க சென்றபோது 1.25 லட்சம் மதிப்புள்ள லேப்டாப் திருடு போய்விட்டது.

இந்நிலையில் பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக புது பஸ் ஸ்டாண்ட் புறக்காவல் நிலையத்தை முழுமையாக செயல்படுத்த எதிர்பார்க்கின்றனர்.

Advertisement