அருப்புக்கோட்டையில் அடிக்கடி மின்தடை

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பகுதிகளில் பராமரிப்பு என்ற பெயரில் மாதத்தில் பலமுறை மின்தடை ஏற்படுத்துவதால் மக்கள் பாதிப்பு அடைகின்றனர்.

அருப்புக்கோட்டை நகரில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான வணிக கடைகள், நிறுவனங்கள் உள்ளன. கிராமப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் அதற்கான பம்பு செட்டுகள் உள்ளன.

7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் அனைத்து செயல்பாடுகளுக்கும் மின்சாரம் முக்கியமாக உள்ளது.

முன்பு நகரில் மாதத்தில் ஒரு நாள் மட்டும் மின் பராமரிப்பிற்காக மின்தடை செய்யப்படும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக பல நாட்கள் மின் பராமரிப்பு என்ற பெயரில் மின்தடை ஏற்படுகிறது. பொது மின்தடை, குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை, பகுதி வாரியாக மின்தடை என அடிக்கடி மின்தடை செய்யப்படுகிறது.

அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் வியாபார நிறுவனங்கள், விசைத்தறிகள், விவசாய பணிகள் பாதிப்பு ஏற்படுகிறது.

காவிரி வைகை குண்டாறு பாசன விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராம்பாண்டியன்:

மின்வாரியத்தில் ஆட்கள் பற்றாக்குறையால் மின்வாரிய பணி பராமரிப்பு பணிகளை முறையாக செய்ய முடியாமல், இருக்கிற ஆட்களை வைத்துக்கொண்டு அடிக்கடி மின்தடை ஏற்படுத்தி பராமரிப்பு பணிகளை பார்க்கின்றனர். ஒவ்வொரு மாதமும் மரம் வெட்டுதல், டிரான்ஸ்பார்மர்கள் மாற்றம் என்ற பெயரில் சொற்ப ஆட்களை வைத்துக்கொண்டு பணியை செய்கின்றனர். மாதத்தில் பலமுறை மின்தடை ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.-

Advertisement