கையெழுத்து இயக்கம்

திருச்சுழி: திருச்சுழி அருகே உழவர் சந்தை கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.

திருச்சுழி அருகே உள்ள எம்.ரெட்டிய பட்டியை சுற்றி 50 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.

இந்தப் பகுதிகளில் விளையும் வெங்காயம், வெண்டை, கத்தரி, அவரை, மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளை அருப்புக்கோட்டை சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டி உள்ளது. அருப்புக்கோட்டையில் உழவர் சந்தைக்கு அதிகாலையில் பஸ்கள் மூலம் கொண்டு செல்வதில் பல பிரச்சனைகள் உள்ளன.

இதை கருத்தில் கொண்டு எம்.ரெட்டியபட்டியில் உழவர் சந்தை அமைத்தால் விவசாயிகள் காய்கறிகளை இங்கு விற்றுக் கொள்ளலாம். இதை வலியுறுத்தி இந்திய கம்யூ., சார்பில் உழவர் சந்தை அமைக்க கோரி கையெழுத்து இயக்கம் நடந்தது.

கிளைச் செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். திருச்சுழி ஒன்றிய செயலாளர் செல்வம் பேசினார்.

Advertisement