கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ., தலைவர் தேர்வு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ., தலைவராக பாலசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக பா.ஜ.,வில் புதிதாக கிளை தலைவர்கள், மண்டல தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக மாவட்ட தலைவர்களுக்கான தேர்வு நடந்தது. மாவட்டத்தில் 3 பேர் மாவட்ட தலைவர் பொறுப்புக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய தலைவராக பாலசுந்தரம் நியமனம் செய்யப் பட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே மாவட்ட தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement