தரமற்ற ரோடுகளால் அதிகரிக்கும் விபத்துக்கள்

விருதுநகர்: விருதுநகரில் சேதமடைந்த தார் ரோடுகள் மண் ரோடாக மாறுவதால் விபத்துக்கள் அதிகரித்துள்ளன.

விருதுநகர் ஒன்றிய பகுதிகளில் சேதமடைந்த ரோடுகளை காட்டிலும் பாளம் பாளமாக பிளந்து தரமின்றி காணப்படும் ரோடுகளால் வாகன ஓட்டிகள் சறுக்கி விபத்தை சந்திக்கின்றனர். அதே போல் தார் ரோடாக இருந்து நாளடைவில் பராமரிப்பின்றி மண் ரோடாக மாறிய பாதைகளாலும் விபத்துக்கள் அதிகரித்துள்ளன.

பொதுவாக கிராமப்புறங்களில் போடப்படும் ரோடுகள், ஆட்கள் அதிகம் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் போடப்படும் ரோடுக்கள் சாதாரணமாக போடும் ரோட்டை காட்டிலும் சற்று தரம் குறைவாக பல இடங்களில் போடப்படுகிறது.

இதனால் அவை விரைவிலேயே சேதமாகி மண் ரோடாகி விடுகின்றன.

இதனால் இரவில் வெளிச்சம் இல்லாமல் இருப்பதால் சறுக்கி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். எனவே தரமற்ற ஊரக இணைப்பு ரோடுகளை சரி செய்ய வேண்டும்.

Advertisement