குப்பைக்கு வந்த மருத்துவ காப்பீட்டு அட்டைகள்

பழனி:பழனி தாலுகா அலுவலக வளாகத்தில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் குப்பையில் கிடந்தன.

பழனி தாலுகா அலுவலகத்தின் பின்புறம் அலுவலக குப்பை கொட்டப்படுகிறது. இங்கு நேற்று 50க்கும் மேற்பட்ட மருத்துவ காப்பீடு திட்ட அட்டைகள் கிடந்தன. பயனாளிகள் அனைவரும் பழனி நகர், புறநகர் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்த காப்பீட்டு அட்டைகள் தற்போது வரை செயல்பாட்டில் உள்ளன.

தாலுகா அலுவலக அதிகாரிகள் கூறும்போது, 'மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நேரடியாக பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. இந்த அட்டைகள் எப்படி குப்பைக்கு வந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொள்கிறோம்' என்றனர்.

Advertisement