ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்மழைநீர் புகுந்து விடுவதாக குற்றச்சாட்டு
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்மழைநீர் புகுந்து விடுவதாக குற்றச்சாட்டு
கெங்கவல்லி, :'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தில், சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, கெங்கவல்லி தாலுகாவில் நேற்று அரசு மருத்துவமனை, பள்ளி, விடுதி, வேளாண் அலுவலகம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தார்.
ஒதியத்துார் பிரிவு சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆய்வு செய்தபோது, மக்காச்சோள விலை குறித்து கேட்டறிந்தார். அப்போது விவசாயிகள், 'மழைக்காலங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மக்காச்சோளம் உள்ளிட்ட விளைபொருட்களை உலர வைக்க முடியவில்லை. மழைநீர் புகுந்து விடுவதால் சிரமமாக உள்ளது. இங்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை' என கூறினர். பின் வேளாண் அலுவலர்களிடம், குறைகளை சரிசெய்ய, கலெக்டர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்தார். ஆத்துார் ஆர்.டி.ஓ., பிரியதர்ஷினி, தாசில்தார் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
செயலர் 'சஸ்பெண்ட்'கூடமலையில், ஊராட்சி உதவி இயக்குனர் சங்கமித்ரா தலைமையில் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது மக்கள், 'சீரான குடிநீர் வினியோகம் செய்வதில்லை. பலமுறை புகார் கூறினாலும் நடவடிக்கை இல்லை' என கூறினர். அப்போது, ஊராட்சி செயலர் ரவிக்குமார், விடுமுறை அனுமதி பெறாமல், பணிக்கு வராதது தெரிந்தது. இதனால் பணியில் அலட்சியமாக உள்ளதாக கூறி அவரை, 'சஸ்பெண்ட்' செய்து, உதவி இயக்குனர் உத்தரவிட்டார்.