முட்டை விலை 5 காசு உயர்வு
முட்டை விலை 5 காசு உயர்வு
நாமக்கல், : நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 480 காசுக்கு விற்ற முட்டை விலை, 5 காசு உயர்த்தி, 485 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.
நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை(காசுகளில்) நிலவரம்: சென்னை, 510, ஐதராபாத், 480, விஜயவாடா, 510, பர்வாலா, 470, மும்பை, 550, மைசூரு, 520, பெங்களூரு, 520, கோல்கட்டா, 560, டில்லி, 515 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், நாமக்கல்லில் நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ, 83 ரூபாய்க்கு விற்ற முட்டைக்கோழி விலையிலும்; பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில், ஒரு கிலோ, 102 ரூபாய்க்கு விற்ற கறிக்கோழி விலையிலும், எவ்வித மாற்றமும் செய்யாமல், அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது.