'ஹெல்மெட்' அணியவிழிப்புணர்வு பேரணி



'ஹெல்மெட்' அணியவிழிப்புணர்வு பேரணி

திருச்செங்கோடு, : தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, நேற்று திருச்செங்கோட்டில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது. நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் பூங்குழலி, திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாமாபிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். டி.எஸ்.பி., இமயவர்மன், கரட்டுப்பாளையம் விவேகானந்தா திடலில் இருந்து பேரணியை துவக்கி வைத்தார்.
திருச்செங்கோடு நகரின் முக்கய வீதி வழியாக சென்ற பேரணி, நாமக்கல் ரோட்டில், பச்சியம்மன் கோவில் அருகே நிறைவடைந்தது. இதில், 'தலைக்கவசம் உயிர்க்கவசம்', 'தர்மம் தலைகாக்கும், தலைக்கவசம் உயிர்காக்கும்', நுாறில் சென்றால், '108'ல் வருவீர்கள் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச்சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement