காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
மல்லசமுத்திரம்,: தேய்பிறை அஷ்டமியையொட்டி, மல்லசமுத்திரம் அருகே, மோர்பாளையத்தில் உள்ள காலபைரவர் கோவிலில், நேற்று மதியம், 12:00 மணிக்கு, மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். பெண்கள் வெண்பூசணியில் தீபமேற்றி வணங்கினர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
* குமாரபாளையம், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவிலில், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடத்தப்பட்டது. இதேபோல், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், கள்ளிப்பாளையம் சிவன் கோவில், கோட்டைமேடு சிவன் கோவில்களில், காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement