கூட்டுறவு அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையில் பணிபுரியும் சார்நிலை அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி நேற்று துவங்கியது.

கடலுார் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையக கூட்டரங்கில் சார்நிலை அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி 3 நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் நடந்த துவக்க நிகழ்ச்சியில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் கோமதி தலைமை தாங்கி, துவக்கி வைத்தார்.

அரசு திட்டங்கள் மக்களுக்கு சென்றடையவும், பதிவாளர் அறிவிப்பை கவனத்தில் கொண்டு சிறப்பாக பணியாற்ற பயிற்சியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் பேசினார். கூட்டுறவு, வீட்டுவசதி, மீன்வள மற்றும் பால்வளம் ஆகிய துறைகளை சேர்ந்த சார்நிலை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

அப்போது, சரக துணைப்பதிவாளர்கள் துரைசாமி, சவிதா, ரங்கநாதன், விருத்தாசலம் கூட்டுறவு நகர வங்கி மேலாண் இயக்குநர் கோகுல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அலுவலர் முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement