இளைஞர்கள் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
சிதம்பரம்: சிதம்பரம், அண்ணாமலைநகரில், இளைஞர்கள் அ.தி.மு.க., வில் இணைந்தனர்.
சிதம்பரம், அண்ணாமலைநகர் பேரூராட்சி பகுதியை சேர்ந்த இளைஞர்கள், அரவிந்த் தலைமையில், பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னிலையில் அ.தி.மு.க., வில் இணைந்தனர். கட்சியில் சேர்ந்தவர்களுக்கு கட்சி துண்டு அணிவித்து எம்.எல்.ஏ., வரவேற்றார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் முருகையன், மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், ஒன்றிய அவைத் தலைவர் பேராசிரியர் ரெங்கசாமி, ஜெ., பேரவை கார்த்திகேயன், வார்டு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement