வாலிபர் தற்கொலை

விருத்தாசலம்: வயிற்று வலியால், பூச்சிமருந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

விருத்தாசலம் அடுத்த சத்தியவாடியை சேர்ந்தவர் குப்புசாமி மகன் திருஞானவேல், 39. அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் விரக்தியடைந்த அவர், கடந்த 19ம் தேதி பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று இறந்தார்.

கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement