ஷர்துல் தாகூர் சதம் * மீண்டது மும்பை அணி
சேலம்: மும்பையில் நடக்கும் 'ஏ' பிரிவு ரஞ்சி கோப்பை லீக் போட்டியின் முதல் இன்னிங்சில் மும்பை அணி 120 ரன் எடுத்தது. ஜம்மு காஷ்மீர் அணி, 206 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இரண்டாவது இன்னிங்சில் ரோகித் சர்மா 28, ஜெய்ஸ்வால் 26 ரன் எடுத்தனர். 101/7 என மும்பை திணறியது. பின் வந்த ஷர்துல் தாகூர் (113*) சதம் விளாசினார். தனுஷ் (58*) அரைசதம் அடித்தார். இரண்டாவது நாள் முடிவில் மும்பை அணி இரண்டாவது இன்னிங்சில் 274/7 ரன் எடுத்து, 188 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
தமிழகம் அபாரம்
சேலத்தில் நடக்கும் 'டி' பிரிவு போட்டியில் தமிழகம், சண்டிகர் மோதுகின்றன. முதல் இன்னிங்சில் தமிழக அணி 301 ரன் எடுத்தது.
நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. சண்டிகர் அணிக்கு கேப்டன் மனன் வோரா (34), ஷிவம் பாம்ப்ரி (108) கைகொடுத்தனர். முதல் இன்னிங்சில் 204 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தமிழகத்தின் அஜித் ராம் 5, சாய் கிஷோர் 3, முகமது 2 விக்கெட் சாய்த்தனர்.
அடுத்து களமிறங்கிய தமிழக அணி, இரண்டாவது இன்னிங்சில் 27/2 ரன் எடுத்து, 124 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
ஜடேஜா 12 விக்.,
ராஜ்கோட்டில் நடந்த 'டி' பிரிவு போட்டியில் டில்லி, சவுராஷ்டிரா மோதின. முதல் இன்னிங்சில் டில்லி 188, சவுராஷ்டிரா 271 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் ரிஷாப் பன்ட் 17 ரன் எடுக்க, டில்லி அணி 94 ரன்னில் சுருண்டது. சவுராஷ்டிரா அணி இரண்டாவது இன்னிங்சில் 15/0 ரன் எடுத்து, 10 விக்கெட்டில் வெற்றி பெற்றது. சுழலில் மிரட்டிய ரவிந்திர ஜடேஜா, இரு இன்னிங்சில் 12 விக்கெட் (5+7) சாய்த்தார்.
ஸ்மரன் இரட்டை சதம்
பெங்களூருவில் நடக்கும் 'சி' பிரிவு போட்டியில் பஞ்சாப், கர்நாடகா மோதுகின்றன. முதல் இன்னிங்சில் பஞ்சாப், 55 ரன்னுக்கு சுருண்டது. பெங்களூரு அணிக்கு ரவிச்சந்திரன் ஸ்மரன் (203) இரட்டை சதம் அடித்து உதவினார். பெங்களூரு அணி முதல் இன்னிங்சில் 475 ரன் குவித்தது. பஞ்சாப் அணி இரண்டாவது இன்னிங்சில் 24/2 ரன் எடுத்து, 396 ரன் பின்தங்கி இருந்தது.
அம்பயர் மோசம்
ஜம்மு காஷ்மீர் அணி கேப்டன் பராஸ் டோக்ரா 40, கூறுகையில்,''அம்பயர் சுந்தரம் ரவி தீர்ப்புகள் ஏமாற்றம் தருகின்றன. ஸ்ரேயாஸ் பேட்டில் பந்து பட்ட போது சப்தம் நன்றாக கேட்டது. ஆனால் அவுட் இல்லை என்றார். ரகானே அவுட்டாகி வெளியே சென்று விட்டார். பின் உமர் நாசிர் வீசியது 'நோ பால்' என தெரிவித்து ரகானேவை பேட்டிங் செய்ய அழைத்தார். ஆனால் 'ரீப்ளே' காண்பிக்கவே இல்லை,'' என்றார்.