விளையாட்டு வீரர்கள் வழியனுப்பும் நிகழ்ச்சி

திண்டுக்கல் : அகில இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் வெவ்வேறு மாநிலங்களில் 37 வருடங்களாக தேசிய விளையாட்டுப்போட்டிகள் நடக்கிறது. 38 வது ஆண்டு தேசிய போட்டிகள் ஜன.29 முதல் பிப்.7 வரை உத்ரகண்ட் மாநிலத்தில் நடக்கிறது.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக கால்பந்து அணி 7 நாட்களாக திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்று தேசிய கால்பந்து போட்டியில் பங்கேற்க திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து சென்றனர்.

அவர்களுக்கு எஸ்.பி.,பிரதீப் தலைமையில் வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.

தமிழ்நாடு கால்பந்து கழக நிர்வாக குழு உறுப்பினர் பசீர் அகமது, திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலர் சிவா, திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழக துணைத்தலைவர் ரமேஷ் பட்டேல், செயலாளர் சண்முகம், பொருளாளர், கலைச்செல்வன், துணை செயலாளர் ஈசாக் பங்கேற்றனர்.

Advertisement