பஸ்சில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது

தேனி:தேனி புது பஸ் ஸ்டாண்டில் போலீசார் போடி பஸ் நிறுத்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அங்கு நின்ற இருவரை விசாரித்தனர். திண்டுக்கல் மாவட்டம், செல்லாயிபுரம் நடராஜன், 48, தங்கச்சியம்மாள்பட்டி அழகர்சாமி, 20, என, தெரிந்தது.

அவர்களிடமிருந்த பைகளில் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10.50 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இருவரையும் போலீசார் கைது செய்து, கஞ்சாவை கைப்பற்றினர்.

ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயபால் இவர்களிடம் பணம் கொடுத்து, ஆந்திர மாநிலம், ராஜமுந்திரி மொத்த வியாபாரி செல்லாராவிடம் கஞ்சாவை வாங்கி வந்து, விற்பனை செய்வது தெரிந்தது. ஜெயபால், செல்லாராவை தனிப்படையினர் தேடுகின்றனர்.

Advertisement