சித்தா டிப்ளமோ முடித்த பட்டதாரிகளுக்கு எச்சரிக்கை

ராமநாதபுரம்,:தஞ்சாவூர் தமிழ் பல்கலையில் சித்த மருத்துவத்தில் டிப்ளமோ படித்து விட்டு டாக்டராக கிளினிக் திறந்து செயல்பட்டால் நடவடிக்கை எடுக்க இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவின்படி தஞ்சாவூர் தமிழ் பல்கலையில் சித்த மருத்துவத்தில் டிப்ளமோ படித்து விட்டு டாக்டராக கிளினிக் நடத்தினால் நடவடிக்கை எடுக்கவும், மாவட்டத்தில் யாரும் டிப்ளமோ படித்துவிட்டு சித்த மருத்துவராக இல்லை என்பதை உறுதி செய்து அறிக்கை அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாவட்டங்களில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர்களுக்கு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி கமிஷனர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து இணை இயக்குநர்கள் மாவட்டத்தில் சித்த மருத்துவ கிளினிக் குறித்து ஆய்வு செய்யவுள்ளனர்.

Advertisement