ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் காஞ்சிபுரத்தில் 5ல் துவக்கம்
புதுச்சேரி: காஞ்சிபுரத்தில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்க தேர்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, ராணுவ ஆள் சேர்ப்பு தலைமையகம் வரும் 5ம் தேதி காஞ்சிபுரம், அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கில் ஆள்சேர்ப்பு முகாமை துவக்குகிறது.
இதில் அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் டிரேட்ஸ்மேன், சிப்பாய் பார்மசி, சோல்ஜர் டெக்னிக்கல், நர்சிங் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தேர்வு நடைபெற உள்ளது.
இந்த முகாமில் பங்கேற்க தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் www.joinindianarmy.nic, ல் பதிவேற்றியபடி அறிவிப்பில் பட்டியலிடப்பட்ட அனைத்து ஆவணங்களையும் கொண்டு வருவது கட்டாயம்.
இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் விண்ணப்பதாரர்கள் சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டை, தலைமை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்: 044-25674924.
ஆட்சேர்ப்பு செயல்முறை நியாயமான மற்றும் வெளிப்படையானது. கடின உழைப்பு மற்றும் தயாரிப்பு மட்டுமே, தகுதிக்கேற்ப அவர்களின் தேர்வை உறுதி செய்யும். இதனால் மோசடி மற்றும் ஏமாற்றுக்காரர்களிடம் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
இந்த முகாம் வரும் 15,ம் தேதி நிறைவு பெறுகிறது.