ஆலோசனை கூட்டம்

புதுச்சேரி: பாகூர் தொகுதிக்குட்பட்ட, மீனவர்களுக்கு மீன்வளத்துறை சார்பில், வழங்க கூடிய சலுகைகள் மற்றும் மீனவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் பாகூரில் நடந்தது.

செந்தில்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். கூட்டத்தில், மீனவர் நலத்துறை அதிகாரிகள், புதுக்குப்பம் உள்ளிட்ட மூன்று மீனவ கிராமத்தினர் கலந்து கொண்டனர்.

இதில் மீன்பிடி வலை, மீன் பதப்படுத்தும் பெட்டி, படகு மற்றும் வலை பின்னும் கூடம் அமைத்து தருவது தொடர்பாக அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

Advertisement