ஊராட்சி மன்ற கட்டடப்பணி விறுவிறு

செங்கல்பட்டு, செங்கல்பட்டு அடுத்த, மோசிவாக்கம் ஊராட்சியில், மோசிவாக்கம், கண்டிகை, கூனம்பட்டரை, ஜானகிபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில், கூனம்பட்டரையில் உள்ள, இ- சேவை மையத்தில், ஊராட்சி மன்ற அலுவலகம் இயங்கி வந்தது.

இதனால், ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு, புதிததாக கட்டடம் கட்டித்தர வேண்டும் என, ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி, கலெக்டர் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசனிடம், ஊராடசி மன்ற தலைவர் மனு அளித்தனர்.

இந்த மனுவை பரிசிலினை செய்து, ஊராட்சி மன்ற புதிய அலுவலகம் கட்ட, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதி 20 லட்சம் ரூபாய், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றிய பொது நிதி 10 லட்சம் ரூபாய் என மொத்தம் 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, நிர்வாக அனுமதி வழங்கி, கலெக்டர் அருண்ராஜ், கடந்த ஆண்டு உத்தரவிட்டார்.

தற்போது, மோசிவாக்கம் ஊராட்சியில், ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும்பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Advertisement