பறக்கும் படையால் ரூ.1.35 லட்சம் பறிமுதல்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான நிலை கண்காணிப்பு குழு, அதிகாரி தனபிரனேஷ் தலைமையில் பி.பி.அக்ரஹாரம் அருகே வாகன தணிக்கை செய்தனர்.

அவ்வழியாக, தேனி, சண்முகநாதன் கோவில் தெருவை சேர்ந்த யோகேஷ் கிருஷ்ணன், போலோ காரில் வந்தார். அவரது காரில் ஆவணங்கள் இன்றி, 1.35 லட்சம் ரூபாய் இருந்ததால், அதை பறிமுதல் செய்து, கருவூலத்தில் செலுத்தினர். நேற்று வரை, 55 லட்சத்து, 84,358 ரூபாய் மதிப்பில் ரொக்கம் மற்றும் மதுபானங்கள், போதை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இதில், 40 லட்சத்து, 50,560 ரூபாயை ஆவணங்கள் தாக்கல் செய்து திரும்ப பெற்றனர். மீதமுள்ள, 15 லட்சத்து, 98,798 ரூபாய் கருவூலத்தில் பாதுகாத்து வருகின்றனர்.

Advertisement