திருப்புட்குழி கோவிலில் தெப்போற்சவம் நிறைவு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி கிராமத்தில், ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், மரகதவல்லி சமேத விஜயராகவ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் தை மாதத்தில் வரும் அமாவாசை தினத்தை தொடர்ந்து, மூன்று நாட்கள் தெப்போற்சவ விழா நடைபெறும்.

இந்த மூன்று நாட்களும் ஜடாயு தீர்த்த குளத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் மரகதவல்லி சமதே விஜயராகவ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

நடப்பாண்டு தெப்போற்சவ விழா, கடந்த 29ம் தேதி துவங்கியது. நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில், மரகதவல்லி சமேத விஜயராகவ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Advertisement