வள்ளிவிலாஸ் ஆலயா பள்ளி ஆண்டு விழா

கடலுார் : கடலுார் அடுத்த நெல்லிக்குப்பம் வாழப்பட்டு வள்ளிவிலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளியின் எட்டாவது ஆண்டு விழா நடந்தது.

விழாவில் கடலுார் மாநகராட்சி ஆணையர் அனு, கல்வி உளவியலாளர் சரண்யா ஜெயக்குமார் மற்றும் கந்தசாமிநாயுடு கல்லுாரி முதல்வர் சபினா பானு சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று துவக்கி வைத்தனர். கடலுார் மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் இளங்கோவன், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. 2023 - 24ம் ஆண்டு நடந்த சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது.

பள்ளி உதவி தலைமைஆசிரியர் மீனா ராஜேந்திரன், பள்ளி ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் பள்ளி முதல்வர் சீனுவாசன், இந்துமதி சீனுவாசன் மற்றும் கல்வி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்பாபு பங்கேற்றனர்.

விழாவில் பெற்றோர்கள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement