50 கிலோவுக்கு பதில் 5 கிலோ 'வாடும்' பூ விவசாயிகள்

வாடிப்பட்டி: அதிக பனி, வெயில் மழை என பருவ நிலை மாற்றத்தால் பூக்களின் விளைச்சல் மிக குறைந்துஉள்ளதால், விலை உயர்வு தொடர்கிறது.

வாடிப்பட்டி தாலுகாவில் வைகை பெரியாறு பாசனத்தில் பயிரிடப்பட்ட முதல்போக நெல் விளைச்சல் பருவ மாற்றத்தால் பாதித்தது.

அதேபோல் பூக்களின் விளைச்சலும் பாதித்துள்ளது. கொண்டையம்பட்டி, கள்வேலிபட்டி, மேலச்சின்னணம்பட்டி பகுதிகளில் கிணறு மற்றும் கால்வாய் பாசனத்தில் செண்டு பூ, ரோஸ், செவ்வந்தி, சம்பங்கி பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன. 2 மாதங்களாக காலம் தவறிய பருவ நிலை மாற்றம் நிலவுவதால் 50 கிலோ கிடைக்கவேண்டிய இடத்தில் 5 கிலோ பூக்கள் மட்டுமே கிடைக்கிறது. விலை கிடைத்தாலும், விளைச்சல் கடுமையாக பாதித்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

அய்யணகவுண்டன்பட்டிவிவசாயி பாலமுருகன்:ரோஸ் ஒரு கிலோவிற்கு ரூ.100க்கு பதில் ரூ.250 வரை கிடைக்கிறது. ஆனால் விளைச்சல் 90 சதவீதம் குறைந்துள்ளது.செவ்வந்தி பூவும் நல்ல விலை போகிறது. முகூர்த்த நாட்கள் வருவதால் விலை அதிகரிக்கும் என ஆறுதல் அடைந்துஉள்ளோம் என்றார்.

Advertisement