பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டி

கடலுார், : கடலுார் செம்மண்டலம் வரதராஜன் நகர், மெட்ரோ பிரண்ட்ஸ் மைதானத்தில் பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி துவங்கியது.

கூடுதல் கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கி போட்டியை துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டுஅலுவலர் மகேஷ்குமார் முன்னிலை வகித்தார். பண்ருட்டி, நெல்லிக்குப்பம், கடலுார், விருத்தாசலம், வடலுார் உள்ளிட்ட எட்டு அணிகள் பங்கேற்றன.

இதில் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள், பயிற்சியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். மாணவிகளுக்கான போட்டி இன்று நடக்கிறது. இதில் விலங்கல்பட்டு, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, பெண்ணாடம், கடலுார் பகுதிகளைச் சேர்ந்த ஆறு பள்ளிகள் பங்கேற்கின்றன.

Advertisement