விளைந்த நெல்லை பங்கு பிரிப்பதில் அரிவாள் வெட்டு
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே கூவர்கூட்டம் கிராமத்தில் விளைந்த நெல் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் ரெத்தினத்தை பண்ணை அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்தார்.
முதுகுளத்துார் அருகே கூவர்கூட்டத்தைச் சேர்ந்த ரெத்தினம் 70, தன்னுடைய நிலத்தை உறவினர் நடராஜன் 65, என்பவரிடம் கடந்த 3 ஆண்டுகளுக்கு பங்குக்கு விட்டுஉள்ளார். நெல்லை 3 ல் ஒரு பங்கு ரெத்தினம், 2 பங்கு நடராஜன் பிரித்துக் கொள்வார்கள்.
இந்த ஆண்டு விளைந்த நெல்லை பங்கு பிரிக்கும் போது ரெத்தினம் தனக்கு குறைவாக நெல் பிரித்து கொடுத்ததாக வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது நடராஜன் மனைவி ராக்கியிடம் தகாத வார்த்தையால் பேசியதில் ராக்கி கையில் வைத்திருந்த பண்ணை அரிவாளால் ரெத்தினம் தலை, கையில் வெட்டினார்.
பலத்த காயமடைந்த நிலையில் ரெத்தினம் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இளஞ்செம்பூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் ராக்கி, நடராஜன மீது எஸ்.ஐ.,முனியாண்டி வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.