பள்ளப்பட்டி அரசு பள்ளியில் 69ம் ஆண்டு விழா கோலாகலம்

அரவக்குறிச்சி: பள்ளப்பட்டி மேல்நிலை பள்ளியின், 69ம் ஆண்டு விழா மற்றும் மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு விழா, நேற்று நடந்-தது. தாளாளர் கஜ்னபர் அலி தலைமை வகித்தார். பள்ளப்பட்டி எஜுகேஷன் சொசைட்டியின் முதன்மை உதவி செயலாளர் அஸ்ரப் அலி வரவேற்றார்.


தொடர்ந்து, மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. பின், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, பள்ளப்பட்டி எஜுகேஷன் சொசைட்டியின் தலைவர் முகமது ரபி பரிசு வழங்கி பாராட்டினார். மேலும், பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு, பள்ளப்பட்டி நகராட்சி தலைவர் முனவர் ஜான், பரிசளித்து பாராட்டினார். குளித்தலை அரசு கலை கல்லுாரியின் தமிழாய்வுத்-துறை உதவி பேராசிரியர் கோபாலகிருஷ்ணன் சிறப்புரை வழங்-கினார். 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், பெற்றோர் கலந்து கொண்டனர்.

Advertisement