78 வழக்குகளில் தொடர்புடையவர் உள்பட 5 பேர் சிக்கினர்; 2 பேருக்கு கால் முறிவு
ராசிபுரம்: தமிழகத்தில், 78 வழக்குகளில் தொடர்புடையவர் உள்பட, ஐந்து பேரை, ராசிபுரத்தில் போலீசார் கைது செய்தனர். டூவீலரில் தப்ப முயன்றபோது தவறி விழுந்ததில், இரண்டு பேருக்கு கால் முறிவு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே, முத்துக்காளிப்பட்-டியை சேர்ந்தவர் கோமதி, 45; அரசு ஊழியர். கடந்த மாதம், 20ல் இவரது வீட்டில், 19 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்-ளையடித்து சென்றனர். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் விசா-ரித்து வந்தனர். நேற்று அதிகாலை, ராசிபுரம் அடுத்த அணைப்பா-ளையம் பகுதியில், எஸ்.ஐ., சுரேஷ் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, டூவீலரில் அந்த வழியாக வந்த, மூன்று வாலிபர்-களை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால், அவர்கள் தப்பிச்-செல்ல முயன்றனர். அப்போது, வேகத்தடையில் தடுமாறி கீழே விழுந்ததில், ஒருவருக்கு கால், மற்றொருவருக்கு கை, காலில் எலும்பு முறிந்தது. மற்றொரு வாலிபரை மடக்கி பிடித்தனர்.
காயமடைந்த இருவரையும், ராசிபுரம் அரசு மருத்துவம-னையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். விசாரணையில், வேலுார் மாவட்டத்தை சேர்ந்த தங்கவேலு மகன் மணிகண்டன், 47; சென்னை, வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கோபாலகிருஷ்னண் மகன் சுந்தர்ராஜ், 23, பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த செல்வம் மகன் மணி, 22, என்பது தெரிந்தது. இதில், மணி-கண்டன் மீது, மதுரை, சேலம், சென்னை, வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் வண்டி திருட்டு, வீடுகளில் கொள்ளை உள்பட, 78 வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
தற்போது, சென்னையில் டூவீலரை திருடிக்கொண்டு தப்பிச்-செல்லும்போது, வரும் வழியில் பூட்டியுள்ள வீடுகளில் புகுந்து திருடியுள்ளனர். அதுபோல், ராசிபுரத்தில் நகையை திருடியது தெரியவந்தது. மணிகண்டன், சுந்தர்ராஜ் ஆகிய இருவரும், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். மணியை, சேலம் சிறையில் அடைத்தனர்.
இதில், மணிகண்டன் என்பவரிடம் நடத்திய விசாரணையில், கூட்டாளிகளான, வேலுார் மாவட்டம், அணைக்கட்டு பகுதியை சேர்ந்த ராஜா மகன் கவியரசு, 25, காட்பாடி, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த அலெக்ஸ் மகன் வசந்த், 25, ஆகிய இருவரும், தேசிய நெடுஞ்சாலை ஒட்டியுள்ள பெரிய வீடுகளை முன்கூட்டியே உளவு பார்த்து தகவல் தெரிவித்து வந்தது தெரியவந்தது. இதைய-டுத்து வேலுார் சென்ற போலீசார், நேற்று மாலை கவியரசு, வசந்த் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.