சாணக்யா பள்ளி ஆண்டு விழா
செஞ்சி : செஞ்சி சாணக்யா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 17வது ஆண்டு விழா நடந்தது.
தாளாளர் தேவராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் யாஸ்மின் வரவேற்றார். பள்ளி முதல்வர் சேகர் ஆண்டறிக்கை வாசித்தார்.
மஸ்தான் எம்.எல்.ஏ., 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுமதி கருத்துரை ஆற்றினார். கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல், ஒன்றிய சேர்மன் விஜயகுமார், ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன், சாணக்யா பள்ளி முதல்வர்கள் மரக்காணம் நரேந்திரன், திண்டிவனம் அருள், மரகதாம்பிகை உயர்நிலை பள்ளி முதல்வர் ராஜவேல், நர்சரி பள்ளி முதல்வர் சாந்தி, சாணக்கியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதுகலை ஆசிரியர் பாக்கியராஜ் நன்றி கூறினார்.