மாநில நீச்சல் போட்டி

மதுரை : பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருநெல்வேலியில் மாநில அளவிலான பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின நீச்சல் போட்டிகள் நடந்தது.

மதுரை நீச்சல் வீரர்கள் தங்கம் 7,வெள்ளி 1,வெண்கலம் 15 என மொத்தம் 23 பதக்கங்கள் வென்றனர். 14 வயதிற்குட்பட்ட பிரிவினருக்கான 400 மீட்டர் ப்ரீஸ்டைல் ரிலே போட்டியில் சத்திரப்பட்டி நல்லமணி பள்ளி மாணவிகள் சாதனாஸ்ரீ, ஹாஷினி, கனிஷ்கா, ஹிரானிகா வெண்கல பதக்கம் வென்றனர். சி.இ.ஓ.ஏ. பள்ளி ஹர்ஷன் 50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் போட்டியில் வெண்கலம், 400 மீட்டர் ப்ரீஸ்டைல் ரிலேயில் வெண்கலம் வென்றார்.

அரவிந்த் பிரசாத் 400 மீட்டர் ப்ரீஸ்டைல் ரிலேயில் தங்கம் வென்றார். விஸ்வாசன், ஆகாஷ் 400 மீட்டர் ப்ரீஸ்டைல் ரிலேயில் வெண்கலம் வென்றனர். 17 வயதிற்குட்பட்ட பிரிவில் சி.இ.ஓ.ஏ. மாணவன் பவித்ரன் 400 மீட்டர் ப்ரீஸ்டைல் ரிலே பிரிவில் தங்கம் வென்றார். தான்யாஸ்ரீ 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக், 50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் போட்டியில் வெண்கல பதக்கம், 400 மீட்டர் ப்ரீஸ்டைல் ரிலே, 400 மீட்டர் ஐ.எம். ரிலே பிரிவுகளில் தங்கப்பதக்கம் வென்றார். 400 மீட்டர் ஐ.எம். ரிலேயில் கார்த்திகா, சுபதக்க்ஷனா தங்கப்பதக்கம் வென்றனர். செயின்ட் ஜோசப் பள்ளி பூஜாஸ்ரீனி 400 மீட்டர் ப்ரீஸ்டைல் ரிலே பிரிவில் தங்கம் வென்றார்.

19 வயதிற்குட்பட்ட பிரிவில் நல்லமணி பள்ளி மாணவி தமிழினி 400 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் வெள்ளி, 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக்கில் வெண்கலம், 400 மீட்டர் ப்ரீஸ்டைல் ரிலே பிரிவில் வெண்கலம் வென்றார். ராஜஸ்ரீ, மலையரசி, அழகுநாச்சி 400 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் வெண்கலம் வென்றார்.

வெற்றி பெற்ற மாணவர்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், விளையாட்டு அலுவலர் ராஜா, மாவட்ட நீச்சல் சங்கத் தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், செயலாளர் கண்ணன், பொருளாளர் அமிர்தராஜ், பயிற்சியாளர்கள் விஜயக்குமார், பரங்குன்றம் பாராட்டினர்.

Advertisement