வன்னியர் சங்கம் இருக்கிறதா? காட்டுவெட்டி குரு மகன் கேள்வி

சிதம்பரம் : வன்னியர் சங்கம் இருக்கிறதா, அது யாருடையாக கைப்பாவையாக உள்ளது என, மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் மகனும், மாவீரன் மஞ்சள் படை தலைவருமான கனலரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிதம்பரத்தில் அவர் அளித்த பேட்டி:

மாவீரன் மஞ்சள் படையினரின் ஒரே பணி, சமூக தீர்த்திருத்தமே. பா.ம.க., கேட்கும், 10.5 சதவிகித இட ஒதுக்கீடு, ஒரு ஏமாற்று வேலை. எனது தந்தை குரு 20 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு போராடினார்.

நாங்கள் எதிர்பார்ப்பது ஜாதிவாரி கணக்கெப்பு, வன்னியர் சமூகத்திற்கு 13 முதல் 14 சதவீதம் வரை தனி இட ஒதுக்கீடு வேண்டும். இதுகுறித்து விரைவில் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்த உள்ளோம்.

ஒவ்வொரு ஆண்டும் தெற்கே தேவர் ஜெயந்தி போல், இனி வடக்கே வன்னியர் ஜெயந்தி என்ற தலைப்பில் கொண்டாடப்படும். வரும் தேர்தலில், எங்கள் சமூகத்திற்கு யார் பாதுகாப்பாக இருப்பார்களோ, அந்தந்த பகுதியில், அவர்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.

மறைந்த வன்னியர் சங்க தலைவர் குரு, வன்னியர்களுக்கு மட்டுமல்ல அனைத்து சமுதாய மக்களுக்கும், போராடக் கூடிய ஒரு தலைவராக இருந்தார்.

காடுவெட்டியில் இருந்து பல நூறு இளைஞர்களை கொண்டு சென்று, அவர்களின் உழைப்பு மற்றும் பணத்தால், உருவாக்கப்பட்டது வன்னியர் அறக்கட்டளை கல்லுாரி. ஆனால், அங்கு சமூக இளைஞர்களுக்கு இலவசமாக இடம் தருவதில்லை.

இளைஞர்களை தவறான பாதை யில், பா.ம.க., வழி நடத்தி சென்று கொண்டிருக்கிறது.

வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு பா.ம.க, ஒன்றும் செய்யவில்லை. நான்காண்டு காலமாக மஞ்சள் படை அமைப்பை, நான் நடத்திக் கொண்டிருக்கி றேன். எங்களுக்கு கட்சி துவங்குவது நோக்கமில்லை. சமுதாயத்திற்காக உழைப்பதே நோக்கம்.

சமுதாய விடுதலைக்காக போராடி வரும் நிலையில், அதனை அமைப்பு ரீதியாக கொண்டு செல்வதே சிறந்ததாக இருக்கும்.

வன்னியர் சங்கம் எங்கு இருக்கிறது, செயல்படுகிறதா என்பது தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement