கோயில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள் அகற்றம்
திருவாடானை, பிப்.3-
திருவெற்றியூர் கோயில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள் தேவஸ்தானம் சார்பில் அகற்றபட்டன.
திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் உள்ளது. வெள்ளி, செவ்வாய் நாட்களில் வெளிமாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
இரவு தங்கியிருந்து மறுநாள் காலையில் கோயில் குளத்தில் நீராடி சுவாமி தரிசனம் செய்வது சிறப்பு என்பதால் பக்தர்கள் கோயில் முன்புள்ள மண்டபத்தில் தங்கி மறுநாள் அதிகாலையில் நீராடுவார்கள். இங்குள்ள தீர்த்த குளத்தில் சில நாட்களாக மீன்கள் செத்து மிதந்தன.
குளிக்கும் போது துர்நாற்றமாக இருந்ததால் பக்தர்கள் முகம் சுளித்தனர். இதனால் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் கடந்த 5 நாட்களாக செத்து மிதந்த மீன்களை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
மீன்கள் இறந்ததற்கான காரணம் குறித்து கண்டறிய பக்தர்கள் வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement