பள்ளி ஆண்டு விழா

மானாமதுரை: மானாமதுரை புனித ஜோசப் மெட்ரிக் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. தாளாளர் கிறிஸ்டி ராஜ் தலைமை வகித்தார். தலைமை முதல்வர் அருள்ஜோஸ்பின் பெப்சி முன்னிலை வகித்தார்.

மதுரை செந்தமிழ் கல்லூரி துணை முதல்வர் ரேவதி சுப்புலட்சுமி, மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமார், டி.எஸ்.பி., நிரேஷ் கல்வி, விளையாட்டு, தனித்திறன் மற்றும் தினமலரின் பட்டம் இதழ் நடத்திய வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், ஒருங்கிணைப்பாளர் சித்ரா ஆகியோருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினர். மாணவர்களின் நடனம், ஓவியம், யோகா, கராத்தே, சிலம்பம், இசைக்குழு, நாடகம் நடந்தது.

மேலாளர் சாலமன், முதல்வர்கள் வள்ளி மயில், ஜீவிதா, லதா பங்கேற்றனர்.

Advertisement