கோடைக்கு முன்பே தர்பூசணி விற்பனை

பேரையூர்: கோடை துவங்கும் முன்பே பேரையூர் பகுதியில் தர்பூசணி விற்பனை துவங்கியுள்ளது.

வெப்பத்தை தணிக்கும் வகையில் இளநீர், பழச்சாறு ஜூஸ், நுங்கு, மோர் போன்றவற்றை கோடையில் அருந்தி மக்கள் தாகத்தை தணித்துக் கொள்வர். இதில் தர்பூசணி உடலை சீரான வெப்பத்தில் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. இந்த தர்பூசணி விற்பனை கோடை துவங்கும் முன்பே பேரையூரில் துவங்கியுள்ளது.இது குறித்து வியாபாரி காளியப்பன் கூறுகையில், ''இந்தாண்டு கோடை காலத்துக்கு முன்பே தர்பூசணி விற்பனைக்கு வந்துவிட்டது. கிலோ ரூ. 20க்கு விற்கிறோம். கோடை துவங்கும்போது விலையும் உயரும்'' என்றார்.

Advertisement