திருவந்திபுரம் கும்பாபிேஷகம்: முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு
கடலுார் : கடலுார் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் கும்பாபிேஷக விழாவில் அமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
கடலுார் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அமைச்சர் பன்னீர்செல்வம், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அறநிலைத்துறை இணை ஆணையர் பரணிதரன், உதவி ஆணையர் சந்திரன்,
நிர்வாக அதிகாரி கிருஷ்ணன் மற்றும் கோவில் பட்டாச்சாரியார்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் துரைராஜ், சக்ராலயா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் கோமதி துரைராஜ், பா.ஜ., மாநில ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு செயலாளர் வினோத் ராகவேந்திரன், அரிஸ்டோ பப்ளிக் பள்ளி சேர்மன் சிவக்குமார், தாளாளர் கஸ்துாரி சொக்கலிங்கம், சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் சொக்கலிங்கம், தே.மு.தி.க., மாவட்ட அவைத்தலைவர் ராஜாராம், ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் தொழிலாளர்கள் நல சங்க மாநில பொருளாளர் ஜெயராமன், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், மாநகராட்சி கவுன்சிலர்கள் பிரகாஷ், சரத் பங்கேற்றனர்.
மேலும், எம்.பி., அகரம் ஊராட்சி தலைவர் ஞானப்பிரகாசம், செந்தில் ஞானவேல் சிட்பண்ட் சீனுவாசன், எஸ்.ஏ., டிரான்ஸ்போர்ட் உதயவேலு, ஸ்ரீ ஜோதி இன்ஜினியரிங் ஒர்க்ஸ் சுந்தர்ராஜன், அ.தி.மு.க., மாநில இளைஞர் அணி துணை செயலாளர் கார்த்திகேயன், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, பவானி குழுமம் ஜெய்சங்கர் நாராயணன், கடலுார் மூத்த வழக்கறிஞர் சிவமணி, வழக்கறிஞர்கள் சரவணன், முகுந்தன், சத்யா, எஸ்.எஸ்., பாத்திர விலாஸ் மாரியப்பன், திருப்பாப்புலியூர் நாயுடு சங்க நிர்வாகிகள் அனந்த ஆழ்வார், தாமோதரன், வெங்கடபதி, ராஜசேகர், சீனிவாசன், பொறியாளர் சந்தானகிருஷ்ணன், கிஷோர், அறநிலை துறை அதிகாரி ஆழ்வார், வேல் டெக்ஸ் உரிமையாளர் வேல்முருகன், குமார், காங்., கடலுார் மாநகர தலைவர் வேலுசாமி, மாநகராட்சி கவுன்சிலர் சரவஸ்வதி வேலுசாமி, ஸ்ரீ வள்ளி விலாஸ் பாலு, சீனுவாசன், ரமேஷ், வி ஸ்கொயர் மால் உரிமையாளர் அனிதா ரமேஷ், வி.ஜி.கே., மெமோரியல் கிளினிக் கணபதி, பாரதி பில்டர்ஸ் சுரேஷ் பாபு, டி.வி.ஆர்., கல்வியியல் கல்லுாரி மற்றும் ஹயக்ரீவர் பப்ளிக் மேல்நிலைப் பள்ளி சேர்மன் ரங்கமணி, கோவிந்தசாமி-வச்சலாதேவி, ஆர்.என்.எம்.எஸ்., கன்ஸ்ட்க்ஷன்ஸ் செந்தில்நாதன், நடராஜன், சபரிநாதன், லக்கி பேப்பர் ஸ்டோர் கபிலன் மற்றும் முத்து லேசர் கலர் லேப் உரிமையாளர்கள் செல்வமுத்துக்குமரன், சுபின், புதுச்சேரி சப்தகிரி ரியல் எஸ்டேட் உரிமையாளர் தொழிலதிபர் ரமேஷ், சிவாங்கி மோட்டார்ஸ் உரிமையாளர் வழக்கறிஞர் ரவிசங்கர், தி.மு.க., பிரமுகர் கோவிந்தராஜ், சதீஷ்குமார், சி.கே., முந்திரி ஏற்றுமதியாளர் மணிகண்டன், மாஸ்டர் பேக்கரி பங்குதாரர் ராஜா, வடக்குத்து ஜே.ஜே., எண்டர்பிரைசஸ் உரிமையாளர் ஜெகன், விருத்தாசலம் மூத்த வழக்கறிஞர் ஜெயக்குமார், வழக்கறிஞர் காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.