காரமடை சுரங்க பாதையில் தண்ணீர் வெளியேற்றம்
மேட்டுப்பாளையம் : காரமடை ரயில்வே சுரங்க பாதையில், தேங்கி இருந்த மழை நீர் வெளியேற்றப்பட்டது.
காரமடையில் கோவை- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில், ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்திற்கு கீழ் இருசக்கர வாகனங்கள் மற்றும் மேம்பாலத்திற்கு அருகே உள்ள ராமசாமி சந்து, அண்ணா நகர், உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் வசித்து வரும் மக்கள் நடந்து செல்ல சுரங்க பாதை அமைக்கப்பட்டது. மக்கள் பயன்பாட்டில் இருந்த சுரங்க பாதையில், மழை தண்ணீர் பல மாதங்களாக தேங்கி நின்றது. இதனை அகற்றதாதல், பொதுமக்கள் சுரங்க பாதையின் மேல் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளங்களை கடந்து சென்றனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக சுரங்க பாதை பகுதிக்குட்பட்ட காரமடை நகராட்சி 27வது வார்டு கவுன்சிலர் வனிதா, அப்பகுதி மக்கள் ஆகியோர், புகார் மனு அளித்தனர். இதையடுத்து, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். உடனடியாக பம்பிங் மோட்டார் பொருத்தப்பட்டு, பல மாதங்களாக தேங்கி இருந்த மழை நீர் அகற்றப்பட்டது.