கோவில் நிலத்தில் பெண் சடலம் மீட்பு
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்திலுள்ள தேன்கனிக்கோட்டை சாலையில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பசவேஸ்-வர சுவாமி கோவில் மானிய நிலம் உள்ளது. இதை கெலமங்கலம் கணேஷ் காலனியை சேர்ந்-தவர் பயன்படுத்தி வருகிறார். அதிலுள்ள தென்-னந்தோப்பை நேற்று காலை, தொழிலாளர்கள் சுத்தம் செய்தனர். அப்போது, அழுகிய நிலையில் பெண் ஒருவரின் கால் பகுதி மட்டும் வெளியே தெரிவதையும், உடல் பகுதி முழுவதும் மண்ணால் மூடியிருப்பதையும் பார்த்து அதிர்ச்சி-யடைந்தனர்.
கெலமங்கலம் போலீசார் மற்றும் தேன்கனிக்-கோட்டை தாசில்தார் கோகுல்நாத் முன்னி-லையில், சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோத-னைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. சடலம் முழுவதும் அழுகிய நிலையில் காணப்பட்டது. பெண் உயிரிழந்து, 5 முதல், 6 நாட்கள் இருக்-கலாம் எனவும், உடலின், 2 இடங்களில் காயங்கள் இருப்பதாகவும், பெண்ணை கொலை செய்து சடலத்தின் மீது மர்மநபர்கள் மண் கொட்டி விட்டு சென்றுள்ளதாக போலீசார் தெரி-வித்தனர். கொலையான பெண் யார் என்ற விபரம் தெரியவில்லை.
கொலை செய்யப்படும் முன், அப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. பிரேத பரிசோ-தனை அறிக்கைக்கு பின் தான், அனைத்து விப-ரங்களும் தெரியவரும் என, கெலமங்கலம் போலீசார் தெரிவித்தனர்.