கன்டெய்னர் லாரி மோதி குழந்தை பலி; 4 பேர் காயம்

ஓசூர்: ஓசூர் அருகே பெரிய சப்படியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி ஷோபா, 21. இவர்களது, 3 வயது பெண் குழந்தை அவந்திகா. ஷோபாவின் அண்ணன் ஆனந்த், 24. நேற்று மாலை தன் குழந்தையுடன் ஷோபா, சூளகிரிக்கு, ஆனந்துடன் ஸ்கூட்டரில் சென்றார். அதேபோல், பி.கொத்தப்பள்ளியை சேர்ந்த முனிராஜ், 47, பச-வராஜ், 42, ஆகியோர், மற்றொரு ஸ்கூட்டரில் சூளகிரி நோக்கி சென்றனர்.
சப்படியிலுள்ள யூ டர்னில் சாலையை கடக்க மாலை, 5:20 மணிக்கு காத்திருந்தபோது, ஓசூரி-லிருந்து கிருஷ்ணகிரி நோக்கி அதிவேகமாக சென்ற கன்டெய்னர் லாரி, இரு ஸ்கூட்டர்கள் மீதும் மோதியது. இதில் லாரி சக்கரத்தில் சிக்கிய குழந்தை அவந்திகா, தாய் கண்ணெதிரே, தலை நசுங்கி பலியானது. ஷோபா, ஆனந்த், முனிராஜ், பசவராஜ் ஆகிய, 4 பேர் படுகாயமடைந்து, கிருஷ்-ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ
மனையில் அனுமதிக்கப்பட்டனர். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்

Advertisement