மருதகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் 50,000 பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம்
நாமக்கல்: பெரியூர் மருதகாளியம்மன் கோவில் கும்பாபி-ஷேக விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. 50,000 பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்-தனர்.
நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பெரியூரில், பிரசித்திபெற்ற மருதகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், கொங்கு வேளாளர் சமூகத்தின் பண்ணை குலம், துாரன் குலத்தா-ருக்கு பாத்தியப்பட்டது. இக்கோவில் திருப்பணி, 28 ஆண்டுகளுக்கு பின், மிகுந்த பொருட்செ-லவில் மேற்கொள்ளப்பட்டு பணிகள் முடிந்தன. இதையடுத்து ஜன., 27ல், கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, ஆறாம் கால யாகசாலை பூஜை நடந்தது. காலை, 9:30 மணிக்கு, மருதகாளியம்மன் நுாதன தங்க விமானம் மற்றும் ராஜகோபுரத்திற்கு குடமு-ழுக்கு விழா கோலாகலமாக நடந்தது.மேலும், வலம்புரி விநாயகர், கருப்பண்ண சுவாமி, காத்தவராயன், மதுரைவீரன், கன்னிமூல கணபதி, கன்னிமார் சுவாமிகள் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கும், மருதகாளியம்மன் மூலஸ்தா-னத்திற்கும் புனித நீரை ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர். கோவில் கோபு-ரங்களுக்கு, 'ட்ரோன்கள்' மூலம் மலர் துாவப்பட்-டது. தொடர்ந்து, மருதகாளியம்மனுக்கும், பரி-வார தெய்வங்களுக்கும் மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.
ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதி-வேந்தன், எம்.பி., ராஜேஸ்குமார், கலெக்டர் உமா, எஸ்.பி., ராஜேஸ்கண்ணன், கோவில் அறங்கா-வலர் குழு தலைவர் சந்திரமோகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
நாமக்கல், கரூர், திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த குடிபாட்டு மக்கள், பொதுமக்கள் என, ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு, 'ட்ரோன்கள்' மூலம் மலர்கள் மற்றும் தீர்த்தம் தெளிக்கப்பட்டது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திர-மோகன், அறங்காவலர்கள் திருநாவுக்கரசு, பழ-னிவேலு, ராமசாமி, குமாரசாமி, திருப்பணி குழு தலைவர் பாலசுப்ரமணியன், உறுப்பினர்கள், இளைஞர் நற்பணி மன்றத்தினர், பண்ணை குலம், துாரன் குலம் குடிப்பாட்டு மக்கள் செய்தி-ருந்தனர்.