மின்மோட்டார் ஒயர் திருட்டு அதிகரிப்பு

திருவாலங்காடு, திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட 42 ஊராட்சிகளில் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு பெரும்பாலான கிராமங்களில் நெல் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.

சில மாதங்களாக ராமாபுரம், காவேரிராஜபுரம், வீரக்கோவில் உள்ளிட்ட கிராமங்களில் விவசாய கிணறுகளில் இருந்த மின் மோட்டார் மற்றும் ஒயர்கள் திருடப்பட்டு வந்தன.

இந்நிலையில், இரண்டு நாட்களாக, திருவாலங்காடு அடுத்த, புளியங்குண்டா கிராமத்தில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து மின்மோட்டார் ஒயர்களை, அடையாளம் தெரியாத நபர்கள், திருடி உள்ளதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

மேலும், இரவு நேரங்களில் மின்மோட்டார் ஒயர்கள் திருடப்படுவது தொடர்வதால், காவல் துறையினர் விழித்து கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement