ராம்குமார்-மைனேனி அபாரம்: சென்னை ஓபன் டென்னிசில்
சென்னை: சென்னை ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் ராம்குமார்-மைனேனி, ஜீவன்-விஜய் சுந்தர் ஜோடி முன்னேறின.
சென்னையில், ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு 'ரவுண்ட்-16' போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சாகேத் மைனேனி ஜோடி, பெல்ஜியத்தின் கிம்மர் கோப்ஜான்ஸ், துருக்கியின் எர்கி கிர்கின் ஜோடியை சந்தித்தது. அபாரமாக ஆடிய ராம்குமார், மைனேனி ஜோடி 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், விஜய் சுந்தர் பிரசாந்த் ஜோடி 6-3, 3-6, 13-11 என சகநாட்டை சேர்ந்த சிராக் துஹான், தேவ் ஜாவியா ஜோடியை வீழ்த்தியது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement