காலிறுதியில் மனுஷ்-மானவ் * சிங்கப்பூர் டேபிள் டென்னிசில் அபாரம்
சிங்கப்பூர்: 'சிங்கப்பூர் ஸ்மாஷ்' சர்வதேச டேபிள் டென்னிஸ் தொடர் சிங்கப்பூரில் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில், இத்தொடரின் 'நம்பர்-6', இந்தியாவின் மனுஷ் ஷா, மானவ் தக்கார் ஜோடி, ஹாங்காங்கின் வாங் சுன் டிங், இயு குவான் ஜோடியை எதிர்கொண்டது. இதன் முதல் செட்டை 11-5 என வசப்படுத்திய இந்திய ஜோடி, அடுத்த செட்டை 11-8 என வென்றது.
தொடர்ந்து அசத்திய இந்திய ஜோடி, மூன்றாவது செட்டை 11-6 என கைப்பற்றியது. முடிவில் இந்திய ஜோடி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது.
பெண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் தியா, மனுஷ் ஜோடி, ஸ்பெயினின் ஆல்வரோ, மரியா ஜியாவோ ஜோடியை சந்தித்தது. இதன் முதல் செட்டை 11-9 என வென்ற இந்திய ஜோடி, அடுத்த செட்டுகளை 4-11, 8-11, 8-11 என இழந்தது. முடிவில் இந்திய ஜோடி 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement