திருநெல்வேலியில் மீண்டும் கொட்டப்பட்ட மருத்துவ கழிவு

திருநெல்வேலி:திருநெல்வேலியில் மீண்டும் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டது குறித்து மாநகராட்சி மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட ராஜகோபாலபுரம் -சிவந்திபட்டி சாலையில் நான்கு வழிச்சாலை அருகே மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இதில் காலாவதியான மருந்து மாத்திரைகள், டானிக் பாட்டில்கள் கிடந்தன. சில மாதங்களுக்கு முன் திருநெல்வேலி அருகே சுத்தமல்லி, பழவூர் பகுதியில் கேரள மாநிலத்தின் மருத்துவ கழிவுகள் கொட்ட பட்டன.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவில் அம்மாநில அதிகாரிகளே அவற்றை லாரிகளில் கேரளாவுக்கு அள்ளிச் சென்றனர்.நேற்றைய மருத்துவ கழிவுகள் குறித்து மாசுகட்டுப்பாட்டு வாரிய, மாநகராட்சி அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

''இக்கழிவுகள் அகற்றப்படும். பெருமாள்புரம் போலீசார் மூலம் வழக்கு பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்'' என கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Advertisement