போலீஸ் ஸ்டேஷன் மீது குண்டு வீசிய மேலும் மூவர் கைது

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் அரிசி கடை மீது கடந்த, 2ம் தேதி நள்ளிரவு முகமூடி அணிந்து வந்த நபர்கள், பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பினர். போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

தமிழரசன், 38, என்ற பழைய குற்றவாளியின், 17 வயது மகனை, 3ம் தேதி சென்னை பல்லாவரத்தில் பிடித்து, வேனில் அழைத்து வந்தனர். அவர், எஸ்.ஐ., முக்தீஸ்வரனின் இடது கையை, கத்தியால் வெட்டி தப்பி செல்ல முயன்றபோது, இன்ஸ்பெக்டர் சசிகுமார் துப்பாக்கியால், அச்சிறுவனின் இடதுகால் முட்டியில் குண்டு பாய்ந்து, வேலுாரில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரிடம் முதற்கட்ட விசாரணையின்படி, கூட்டாளிகள் மூவரை கைது செய்தனர்.

Advertisement