மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி மனு

சென்னை:பகுதி நேர கலைப்பாட மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தினர், தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கமிஷனரிடம் மனு அளித்துள்ளனர்.

சங்கத் தலைவர் ஆனந்தகுமார் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த, 2012ம் ஆண்டு பகுதி நேர ஆசிரியர்களாக ஓவியம், இசை, தையல், வாழ்வியல் திறன் பாடப்பிரிவுகளில், 16,549 ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட்டனர். அவர்களில் 180 பேர் மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள். எங்களுக்கு வாரத்திற்கு மூன்று அரை நாள் வீதம், 11 மாதங்கள் மட்டும், குறைந்த அளவில் ஊதியம் வழங்கப்படுகிறது.

கடந்த, 13 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில், 'எங்களை பணி நிரந்தம் செய்வோம்' என, வாக்குறுதி அளித்தனர். ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும், எங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை. மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை கருத்தில் வைத்து, கருணையோடு எங்களை பணி நிரந்தரம் செய்ய, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement