விழிப்புணர்வு ஊர்வலம்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் முன்பு சட்டப் பணிகள் குழு, போக்குவரத்து துறை, போலீசார் இணைந்து போக்குவரத்து விதிமுறைகள் குறித்த சட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

சார்பு நீதிபதி செல்வின் ஜேசுராஜா துவக்கி வைத்தார். குற்றவியல் நீதிபதி முத்துஇசக்கி, மாவட்ட முதன்மை உரிமையியல்நீதிபதி சிவரஞ்சனி முன்னிலை வகித்தனர்.

ஊர்வலத்தில் போலீசார், மக்கள் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். சாலை விதிகளை கடைபிடிப்போம் என உறுதிமொழி எடுத்தனர்.

ஏற்பாடுகளை போக்குவரத்து ஆய்வாளர் கண்ணன் தலைமையில் அலுவலர்கள் செய்தனர்.

Advertisement